/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்
/
உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்
ADDED : ஏப் 17, 2025 01:39 AM
ஆத்துார்:ஆத்துார் அருகே துலுக்கனுார் - ஒட்டம்பாறை வழியே செல்லும் வசிஷ்ட நதி குறுக்கே, பாலம் வசதி இல்லாததால், தடுப்பணை கரை வழியாக மக்கள் சென்று வருகின்றனர்.
தவிர, ஆற்று நீரில் இறங்கி மயான பகுதிக்கும் செல்லும் அவலம் உள்ளது. அதனால் அப்பகுதியில் பாலம் அமைக்க மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து நபார்டு நிதி உதவி திட்டத்தில், 3.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம், மேம்பாலப்பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து துலுக்கனுார் வசிஷ்ட நதி பகுதியில், பாலம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை, அட்மா குழு தலைவர் செழியன் தலைமையில் நடந்தது. முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், அய்யாக்கண்ணு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.