/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்: மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி
/
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்: மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்: மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்: மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : பிப் 07, 2025 04:07 AM
வீரபாண்டி: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், வீரபாண்டி வட்டார மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு, வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. தெற்கு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கவிதா தலைமை வகித்தார்.
அதில் கருத்தாளர்களான தேவிகா, முகுந்தபூபதி பேசுகையில், ''50 ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைத்து பொருட்கள், சேவைக-ளுக்கு கட்டாயம் ரசீது பெற வேண்டும். அதை பத்திரமாக வைத்-திருந்து, குறைகள் ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்-துக்கு ரசீதுடன் எழுத்துப்பூர்வ புகார் அளிக்க வேண்டும். இதற்கு நிறுவனங்கள், பதில் சொல்லியாக வேண்டும் என, சட்டத்தில் இடம் உள்ளது. இதை நீங்கள், அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்,'' என, அறிவுறுத்தினர். முன்னதாக, சட்டத்தின் சிறப்-பம்சங்கள் குறித்து அச்சடிக்கப்பட்ட கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. வீரபாண்டி வருவாய் ஆய்வாளர் எல்லம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.