/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் துணை முதல்வர் பங்கேற்ற விழா மாநகராட்சி ரூ.18 லட்சம் செலவால் சர்ச்சை

ADDED : நவ 28, 2024 06:54 AM
சேலம்: சேலத்தில் கடந்த மாதம் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற விழாவுக்கு, மாநகராட்சி சார்பில், ரூ.17.98 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி, கடந்த அக்., 20ல் சேலம் வந்தார். அவரது தலைமையில் சேலம் மாநகராட்சியின் நேரு விளை-யாட்டு அரங்கில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. அதில் மாநகராட்சி சார்பிலும் சில நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, சேலம் மாநகராட்சி சார்பில், 18 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அதன்படி, 10.11 லட்சம் ரூபாய், ஒலி, ஒளி, மற்றும் இதர முன்னேற்பாடு பணிக-ளுக்கு, நாமக்கல் ராணி சவுண்ட்
அண்ட் லைட் சர்வீஸ் நிறுவனத்-துக்கும், 7.87 லட்சம் ரூபாய், முகப்பு பகுதியில் புல் தரை, எல்.இ.டி., டிவி,
பிளக்ஸ், வழிகாட்டும் பலகை, சாமியானா பந்தல் ஆகியவற்றை வாடகைக்கு பொருத்தும் பணிக்கு, சேலம்
ஜே.எம்.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துக்கும், பணி ஆணை வழங்-கப்பட்டு, விழா ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு துறை சார்பில் நடந்த விழாவுக்கு மாநகராட்சி சார்பில், கிட்டத்தட்ட, 18 லட்சம் ரூபாய் செலவு
செய்தது சர்ச்-சையை எழுப்பியுள்ளது. எதிர்கட்சி கவுன்சிலர்கள் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.