ADDED : ஜூன் 18, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், அழகாபுரம் பகுதியில் யூனியன் வங்கி கிளை உள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை, வங்கியின் வெளிப்புற சுவரில் உள்ள, 'ஏசி' பெட்டியில் உள்ள காப்பர் ஒயரை திருடுவதற்காக வாலிபர் ஒருவர் கழற்றியுள்ளார்.அருகில் உள்ளவர்கள் அந்த வாலிபரை பிடித்து, அழகாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை நடத்தியதில், அவர் கோரிமேடு, கோம்பைப்பட்டியை சேர்ந்த ஹரிகரன், 22, என்பது தெரியவந்தது. வங்கியின் சார்பில் நகை மதிப்பீட்டாளர் குழந்தைசாமி கொடுத்த புகார் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரிகரனை கைது செய்தனர்.