/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒப்பந்த பணிக்கு மாநகராட்சி அழைப்பு
/
ஒப்பந்த பணிக்கு மாநகராட்சி அழைப்பு
ADDED : டிச 13, 2025 04:57 AM
சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிக்கை: சேலம் மாநகராட்சி, தேசிய சுகாதார திட்டத்தில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர், மருந்தாளுனர், ஆய்-வக நுட்புனர், மருத்துவ பணியாளர் என, 9 பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவங்களை, மைய அலுவலகம், அறை எண்: 114, சுகாதார பிரிவில் பெற்று, பூர்த்தி செய்து, டிச., 22க்குள் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்கலாம்.
பணியின்போது காதல்போலீசில் ஜோடி தஞ்சம்
தாரமங்கலம்: தாரமங்கலம், பாப்பம்பாடி கரட்டூரை சேர்ந்தவர் கார்த்திக், 22. டிப்ளமோ முடித்துள்ளார். பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் தாரணி, 21. பி.காம்., சி.ஏ., முடித்துள்ளார். இருவரும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி
புரிந்த நிலையில் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார் பெற்றோரை அழைத்து பேசியதில், தாரணி பெற்றோர் சமாதானம் ஆகாததால் கார்த்திக் பெற்றோருடன், ஜோடியை அனுப்பினர்.

