/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அறுவை சிகிச்சை வசதிகளுடன் கால்நடை மருத்துவமனை தேவை'
/
'அறுவை சிகிச்சை வசதிகளுடன் கால்நடை மருத்துவமனை தேவை'
'அறுவை சிகிச்சை வசதிகளுடன் கால்நடை மருத்துவமனை தேவை'
'அறுவை சிகிச்சை வசதிகளுடன் கால்நடை மருத்துவமனை தேவை'
ADDED : டிச 13, 2025 04:56 AM
ஓமலுார்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், சேலம் மாவட்ட, 7வது மாநாடு, ஓமலுாரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார்.
அதில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு, 45 ரூபாய், எரு-மைப்பால் லிட்டருக்கு, 52 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்; தர-மான தீவனத்தை, 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்; கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்து-களும் தட்டுப்பாடின்றி வழங்குதல்; சேலம் மாவட்டத்தில், 3 இடங்களில், அறுவை சிகிச்சை வசதிகளுடன் கால்நடை மருத்து-வமனை அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து தலைவராக ராஜேந்திரன், செயலர் அரியா
கவுண்டர், பொருளாளர் ராமலிங்கம் உள்பட,
21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக விவசாய சங்க மாவட்ட செயலர் ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.