/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்க வலியுறுத்தல்
/
மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்க வலியுறுத்தல்
ADDED : டிச 13, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், 9வது மாநில மாநாடு ஓமலுாரில் நேற்று தொடங்கியது.
ஓமலுார் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், பிரதிநி-திகள் அணிவகுப்பு பேரணியை, அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து பேரணி, விழா நடக்கும் மண்டபத்தில் முடிந்தது. அங்கு மாநாட்டு கொடியை, மாநில தலைவர் பாலசுப்ரமணி ஏற்றினார். அதில் மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்று நடத்தல் உள்பட, 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு சங்க நிர்வா-கிகள் பங்கேற்றனர். இன்று மாலை, ஓமலுார் பஸ் ஸ்டாண்டில், பொது மாநாடு நடக்கிறது

