/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டூவீலர்களுக்கு கூடுதல் கட்டணம் மாநகராட்சி அதிகாரிகள் உடந்தை
/
டூவீலர்களுக்கு கூடுதல் கட்டணம் மாநகராட்சி அதிகாரிகள் உடந்தை
டூவீலர்களுக்கு கூடுதல் கட்டணம் மாநகராட்சி அதிகாரிகள் உடந்தை
டூவீலர்களுக்கு கூடுதல் கட்டணம் மாநகராட்சி அதிகாரிகள் உடந்தை
ADDED : ஏப் 29, 2025 02:07 AM
சேலம்:பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமையில் கட்சியினர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி, மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, பதாகையை பறிமுதல் செய்த பின் வழங்கிய மனு விபரம்:
சேலம் புது பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டில் இரு சக்கர வாகனம் நிறுத்த, ஒருநாள் வாடகை கட்டணமாக, 15 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், குத்தகைதாரர் 25 ரூபாய் வசூல் செய்கிறார்.
அதேபோல, கழிப்பிடத்துக்கு, 5 ரூபாய்க்கு பதிலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எந்த இடத்திலும் கட்டண விபர தகவல் பலகை வைக்கப்படவில்லை. இதுபற்றி, மாநகராட்சி கமிஷனர் முதல், மண்டல அதிகாரிகள் வரை ஆதாரத்துடன் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை
இல்லை.
நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தால் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என, நிபந்தனையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, குத்தகை உரிமத்தை ரத்து செய்து, குத்தகைதாரர் மீது வழக்கு
பதிந்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் குத்தகைதாரருக்கு துணைப்போகும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

