/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளிக்கு கத்திக்குத்து ஊர் கவுண்டர் மகன் கைது
/
தொழிலாளிக்கு கத்திக்குத்து ஊர் கவுண்டர் மகன் கைது
ADDED : மார் 11, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்:கொளத்துார்,
பண்ணவாடி அடுத்த பூதப்பாடியை சேர்ந்த, கட்டட தொழிலாளி அழகேசன்,
33.
இவரது வீடு அருகே வசிக்கும் ஊர் கவுண்டர் கந்தசாமி மகன் ஆறுமுகம்,
39. இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று மதியம், மது போதையில்
இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆறுமுகம்,
கத்தியால் அழகேசன் முதுகு, நெற்றி, கையில் குத்தியுள்ளார். படுகாயம்
அடைந்த அழகேசன், சேலத்தில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். கொளத்துார் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து
கத்தியை பறிமுதல் செய்தனர்.

