/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தொழில் சார்ந்த சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்'
/
'தொழில் சார்ந்த சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்'
'தொழில் சார்ந்த சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்'
'தொழில் சார்ந்த சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்'
ADDED : டிச 09, 2024 07:22 AM
ஓமலுார்: ''தொழில் சார்ந்த சவால்களை மாணவர்கள் தைரியமாக எதிர்கொண்டு தீர்வு காண வேண்டும்,'' என, நெய்வேலி என்.எல்.சி., இயக்குனர் வெங்கடாசலம் பேசினார்.
சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில், 2019 - 2023ல் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். நெய்வேலி என்.எல்.சி., இயக்குனர் வெங்கடாசலம், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக அவர் பேசியதாவது: இக்கல்லுாரியில், 1983ல் படித்த முன்னாள் மாணவன் நான். பட்டமளிப்பு விழா என்பது மாணவ, மாணவியர் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. சேலம் அரசு பொறியியல் கல்லுாரிக்கு தனி அடையாளம் உண்டு. கல்வி முடித்த மாணவர்கள், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதில் கவலை கொள்ளக்கூடாது. வேலை கிடைக்காவிட்டால் கஷ்டம். கிடைத்துவிட்டால் அதைவிட கஷ்டம். என் 37 ஆண்டு காலத்தில், பல்வேறு சவால்களை சந்தித்துள்ளேன். ஒருபோதும் பின்வாங்கியது கிடையாது. தொழில் சார்ந்த சவால்களை மாணவர்கள் தைரியமாக எதிர்கொண்டு தீர்வு காண வேண்டும். தினமும், 20 நிமிடம் புதிதாக கற்றுக்கொள்ள அல்லது தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் கீதா உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேடையில், 360 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.