/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடர்ந்து குற்றங்கள் மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்
/
தொடர்ந்து குற்றங்கள் மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்
ADDED : டிச 06, 2024 07:18 AM
சேலம்: சேலம், அழகாபுரம், பெரியபுதுார் அர்த்தனாரி தோட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த அக்., 25ல், கூட்டாளிகளுடன் சேர்ந்து அழகாபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி, 15,000 ரூபாய், மொபைல் போன், இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டார்.
இதுகுறித்த புகார்படி, அழகாபுரம் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் இருப்பதும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. தவிர, 2023ல் குண்டாசில் கைது செய்யப்பட்டதும் தெரிந்தது. அதேபோல் கடந்த செப்., 11ல் கந்தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த சதீஷ், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். விசாரணையில் சதிஷ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிந்தது. இதனால் மணிகண்டன், சதீஷ் ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.