/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபருக்கு வெட்டு 2 பேருக்கு 'காப்பு'
/
வாலிபருக்கு வெட்டு 2 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 19, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை, கறிக்கடை பஸ் ஸ்டாப் அருகே ஜவுளி கடை நடத்துபவர் ஈஸ்வரன், 39. அதே பகுதியை சேர்ந்த தறிதொழிலாளி தங்கதுரை, 36. இவர்கள் இடையே கிரிக்கெட் விளையாடியபோது தகராறு ஏற்பட்டது.
இந்த முன்விரோதத்தில் நேற்று முன்தினம் தங்கதுரை, ஈஸ்வரனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி மகுடஞ்சாவடி போலீசார்
விசாரித்து, தங்கதுரை, அவருக்கு உடந்தையாக இருந்த கறிக்கடையை சேர்ந்த தறிதொழிலாளி மதுபாலன், 35, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.