/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காற்றால் பனை மரங்கள் விழுந்து 'சிலிண்டர் டெலிவரிமேன்' பலி
/
காற்றால் பனை மரங்கள் விழுந்து 'சிலிண்டர் டெலிவரிமேன்' பலி
காற்றால் பனை மரங்கள் விழுந்து 'சிலிண்டர் டெலிவரிமேன்' பலி
காற்றால் பனை மரங்கள் விழுந்து 'சிலிண்டர் டெலிவரிமேன்' பலி
ADDED : மே 24, 2025 02:06 AM
சேலம், சேலம், பழைய சூரமங்கலம், வெள்ளைய கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராமதுரை, 53; சூரமங்கலத்தில் உள்ள காஸ் நிறுவனத்தில் சிலிண்டர், 'டெலிவரி' வேலை செய்து வந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு பணி முடிந்து, 'பஜாஜ் எம்.,80' பைக்கில், சேலத்தாம்பட்டி ஏரியையொட்டி உள்ள சாலையில் சென்றார்.
அப்போது சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், சாலையோரமிருந்த இரு பனை மரங்கள், ராமதுரை மீது விழுந்தது. மரங்களுக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே இறந்து விட்டார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த ராமதுரைக்கு, மனைவி மீனா, மகன் கார்த்தி, 27, மகள் திவ்யதர்ஷினி, 25, உள்ளனர். அதே பகுதியில் சூறைக்காற்றுக்கு, 2 மின் கம்பங்கள் சாய்ந்தன. அதில் ஒரு கம்பம், சாலையில் விழுந்ததால், போக்குவரத்து தடைபட்டது.