/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாவில் மர்மம்: சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை
/
சாவில் மர்மம்: சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை
ADDED : நவ 17, 2024 07:04 AM
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை ஊராட்சி, சின்னமாரி-யம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 49. கூலித்தொ-ழிலாளியான இவர், மனைவியை பிரிந்து, 20 ஆண்டுகளாக தனியே வசித்து வந்தார். கடந்த, 5ல் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள், உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்நிலையில் கந்தசாமியின் அண்ணன் மகன் கார்த்திக், 36, என்-பவர், மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதில் கந்த-சாமி சாவில் மர்மம் உள்ளதாக கூறியுள்ளார். இதனால் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலரமணன் தலைமையில் குழுவினர், நேற்று சுடுகாட்டில் சடலத்தை தோண்டி பிரேத பரி-சோதனை செய்தனர். மகுடஞ்சாவடி போலீசார், வருவாய்த்துறை-யினர் உடனிருந்தனர்.