/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் நிலத்தில் பழுதான கட்டடம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றம்

ADDED : ஜூலை 22, 2025 01:21 AM
சேலம், காளியம்மன் கோவில் நிலத்தில், பயன்பாடின்றி பழுதாகி இருந்த பழைய கட்டடம், போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.
சேலம், அம்மாபேட்டை காளியம்மன் கோவிலில் கும்பாபி ேஷக திருப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவில் நிலத்தில் இருந்த பழைய பழுதான கட்டடத்தை இடித்து அகற்ற, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பெறப்பட்டது.
அதன்படி நேற்று, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில், பழைய கட்டடத்தை இடிக்க முயன்ற போது, கோவில் நிலத்தில் குடியிருக்கும் பக்கத்து கடைக்காரர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிப்பதை தடுத்து தகராறில் ஈடுபட்டார். அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பால்ராஜ், டவுன் வி.ஏ.ஓ., சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர் சமாதானமடைந்தார். இதையடுத்து, ஒரு மணி நேரத்துக்கு பின் அம்மாபேட்டை பிரதான சாலையில் போக்குவரத்தை திருப்பி விட்டு, மின்சார இணைப்புகளை துண்டித்து, பொக்லைன் இயந்திரம் மூலம், 200 சதுர அடியில் கட்டப்பட்டிருந்த பழுதான கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் காளியம்மன் கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.