/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயர் மின் கோபுரத்தால் பாதிப்பு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
/
உயர் மின் கோபுரத்தால் பாதிப்பு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
உயர் மின் கோபுரத்தால் பாதிப்பு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
உயர் மின் கோபுரத்தால் பாதிப்பு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜன 05, 2024 12:09 AM

சேலம்:சேலம் மாவட்ட உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்க கூட்டியக்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய சங்க சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அதில் மாநில பொதுச்செயலர் சாமி நடராஜன் பேசியதாவது:
கடந்த, 7 ஆண்டுகளில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து மின் வினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பல லட்சக்கணக்கான விவசாயிகள் நில மதிப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முறையான இழப்பீடு கொடுக்காமல் குறைந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பல இடங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதனுடன் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலர் சண்முகராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.