ADDED : டிச 23, 2024 10:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து, பத்து ரூபாய் இயக்கம் சார்பில், வரும், 30ல், சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்த, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ஜி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் விஸ்வராஜூ, ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை வழங்கினார். சேலம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

