/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயர்த்திய பருவ கட்டணம் திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
/
உயர்த்திய பருவ கட்டணம் திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 10, 2024 01:47 AM
உயர்த்திய பருவ கட்டணம்
திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
சேலம், அக். 10-
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் சேலம், வின்சென்ட்டில் உள்ள அரசு கலைக்கல்லுாரி முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் இப்ராஹிம் தொடங்கி வைத்தார். அதில் உயர்த்தப்பட்ட பருவ கட்டணத்தை திரும்ப பெறுதல்; குடிநீர், கழிப்பிடம் வசதி செய்து தருதல்; போராடும் மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் மிரட்டுவதை கைவிடல்; கல்லுாரி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும் மாணவர் சேர்க்கையின்போது அடையாள அட்டைக்கு, 49 ரூபாய் பெற்ற நிலையில் மீண்டும், 60 ரூபாய் வசூலிப்பதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலர்கள் ரமேஷ், நேதாஜி, தீனதயாளன், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

