sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

24ம் ஆண்டாக திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

/

24ம் ஆண்டாக திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

24ம் ஆண்டாக திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

24ம் ஆண்டாக திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை


ADDED : மே 19, 2025 02:14 AM

Google News

ADDED : மே 19, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர், ராமானுஜதாசர் என்ற கண்-ணையன், 70. குருசாமியான இவரது தலைமையில் சுற்றுவட்-டார பக்தர்கள், ஆண்டுதோறும் திருமலை திருப்பதிக்கு பாதயாத்-திரை செல்வர். அதன்படி, 24ம் ஆண்டாக, கடந்த மாதம் மாலை அணிந்து விரதமிருந்த, 30 பக்தர்கள், நேற்று முன்தினம், பெத்-தாம்பட்டி சென்றாய பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து இருமுடி கட்டி அன்னதானம் செய்தனர். நேற்று காலை, 7:00 மணிக்கு பெருமாள் கோவிலில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினர்.

இதுகுறித்து ராமானுஜதாசர் கூறியதாவது:கடந்த, 24 ஆண்டாக ஆட்டையாம்பட்டியில் இருந்து திருப்ப-திக்கு பாதயாத்திரை சென்று வருகிேறாம். யாத்திரையில் தினமும் அதிகாலை, 4:00 முதல் காலை, 10:30 மணி வரை நடைபயணம் செய்து, அருகே உள்ள கோவில், மடம் அல்லது தாசர் வீடுகளில் தங்கி இளைப்பாறி, மீண்டும் மாலை, 5:00 முதல், இரவு, 11:00 மணி வரை நடப்போம். ஒரு நாளில், 35 முதல், 40 கி.மீ., பாதயாத்திரையாக சென்று, 10 நாட்களில் திரும-லையை அடைந்து தரிசனம் செய்வோம். மீண்டும் நடைபயண-மாகவே மலையில் இருந்து இறங்கி வந்து, ரயில் மூலம் சேலத்-துக்கு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us