ADDED : நவ 03, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில், அத்துமீறிய பெண்களை கண்டித்து, பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், இரவில் அர்த்தஜாம பூஜை நடத்தப்பட்டு, உற்சவர் சிலைகள், கோவிலை சுற்றி எடுத்து வரப்படுவது வழக்கம். பின் பள்ளியறைக்கு செல்லும் முன், பக்தர்களால் பாடல்கள் பாடப்படும். நேற்றிரவு உற்சவர் கோவிலை வலம் போது, அங்கிருந்த தாய், மகள் என இரண்டு பெண்கள், சுவாமியை தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துமீறி நடந்து கொள்ளும் பெண்களை கண்டித்து, பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நடத்தினர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, பக்தர்களை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர்
