ADDED : ஜூலை 27, 2026 12:58 AM
அ நிறம் | அளவு
சேலம்: ஆடி பிரதோஷத்தை ஒட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை, அதிகார நந்திக்கு பால், தயிர், இளநீர், கரும்புச்-சாறு உள்பட, 16 வகை பொருட்களால் அபிேஷகம் செய்யப்-பட்டது.
வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய, ஸ்வர்ணாம்-பிகை அம்மன் சமேத சுகவனேஸ்வரரை, பக்தர்கள் தோளில் சுமந்து, கோவிலை, 3 முறை வலம் வந்தனர். தொடர்ந்து மண்ட-பத்தில் பிரதோஷ நாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சாரல் மழையில் நனைந்தபடி, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரி-சையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
