/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆங்கில புத்தாண்டால் கோவில்களில் சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
ஆங்கில புத்தாண்டால் கோவில்களில் சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ஆங்கில புத்தாண்டால் கோவில்களில் சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ஆங்கில புத்தாண்டால் கோவில்களில் சிறப்பு பூஜை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 02, 2026 05:05 AM

சேலம்: ஆங்கில புத்தாண்டை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்-தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சேலம், தேர்வீதி ராஜகணபதி கோவிலில் நேற்று, மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, தங்க கவசம் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரி-சையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோட்டை மாரியம்மன் கோவிலில், மூலவருக்கு வெள்ளி கவசம் சார்த்தி பூஜை செய்யப்-பட்டது. கோட்டை அழகிரிநாதர் கோவிலில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், சிங்கமுக ஆஞ்-சநேயர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளும் தங்க கவசத்தில் ஜொலித்தனர்.
அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு, 'சமயபுரம் மாரியம்மன்' அலங்-காரம் செய்யப்பட்டிருந்தது. அய்யந்திருமாளிகை மாரியம்மன், திருமாங்கல்ய கயிறு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரசா-மிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில், தங்க கவசத்தில் காட்சியளித்தார். நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் முழுதும், மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்-தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.குரங்குச்சாவடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நெய் அபி ேஷகம் செய்யப்பட்டது. அங்கு பக்தர்களுக்கு லட்டு பிரசாத-மாக வழங்கப்பட்டது. நாள் முழுதும் அன்னதானமும் வழங்கப்-பட்டது.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் வாசனை திரவியங்-களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்-தர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாரமங்கலம் பத்ரகாளியம்மன் கோவிலில் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்-காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
ஓமலுார் கடை வீதி பெரிய மாரியம்மன் வெள்ளி கவசம்; செவ்-வாய்சந்தை காசிவிஸ்வநாதர் ஆலய மூலவர் சிவலிங்கம், சிறப்பு மலர் அலங்காரம்; காருவள்ளி சின்னதிருப்பதி வெங்கட்ரமணர், நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் சிறப்பு அலங்காரங்களில் காட்சிய-ளித்தனர்.
ஆத்துார், தாயுமானவர் தெரு திரவுபதி அம்மன், தங்க கவசம், புஷ்ப அலங்காரம்; ஆத்துார் வெள்ளப்பிள்ளையார், வெண்ணெய் காப்பு அலங்காரங்களில் அருள்பாலித்தனர். விநாயகபுரம் கூட்-ரோடு ரங்கநாதர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனுார் கங்கா-சவுந்தரேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், தம்மம்-பட்டி காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

