/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீ மிதித்து நேர்த்திக்கடன்செலுத்திய பக்தர்கள்
/
தீ மிதித்து நேர்த்திக்கடன்செலுத்திய பக்தர்கள்
ADDED : ஏப் 25, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடிஇடைப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள கரியகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் கோவிலில் சிறப்பு பூஜை நடந்து வந்தது.
நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், கரியகாளியம்மன் கோவில் முன் உள்ள அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடனும், அலகு குத்தியும் தீ மிதித்தனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் சுவாமியை வழிபட்டனர்.

