/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நோன்பு கயிறு கட்டி அனந்த பத்மநாப விரதம் பெருமாள் கோவில்களில் வழிபட்ட பக்தர்கள்

ADDED : செப் 07, 2025 01:28 AM
சேலம் :சுமங்கலி பெண்கள், கணவரின் நீண்ட ஆயுளுக்கு வரலட்சுமி விரதம் இருப்பர். அதேபோல் ஆண்கள், தொழில், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற, பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட, அனந்த பத்மநாப விரதம் இருப்பர். அதை முன்னிட்டு, சேலம் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத
சவுந்தரராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
உற்சவர் சவுந்தரராஜர், சேஷ வாகனத்தில், சயன திருக்கோலத்தில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அங்கு ஏராளமான ஆண்கள், குடும்பத்துடன் வந்து, சிறப்பு பூஜை செய்து, வண்ண நோன்பு கயிறுகளை, 'சாமந்தி' பூக்களுடன் சேர்த்து வலது கையில் கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து பக்தர்கள் அவரவர் வீடுகளில் அனந்த பத்மநாப சுவாமி படத்துக்கு முன் இனிப்பு, 'போளி' படைத்து விரதத்தை முடித்தனர்.
மாலையில் பெருமாள் சர்வ அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார்.
அதேபோல் பட்டைக்கோவில் வரதராஜர், கிருஷ்ணர், பொன்னம்மா
பேட்டை ஆஞ்சநேயர், அசோக் நகர் லட்சுமி பெருமாள், வீரணாம் பிரிவு அருகே லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.