/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா: தம்மம்பட்டி கவுன்சிலர்கள் மனு

ADDED : டிச 31, 2024 07:43 AM
சேலம்: சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில், 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., 13, அ.தி.மு.க., 3, காங்கிரஸ், 2, பேர் உள்ளனர். இந்நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த துணைத் தலைவர் சந்தியா தலைமையில், தி.மு.க., கவுன்சிலர்கள் நடராஜ், வரதராஜன், சபீனா பேகம், காவியா, கலி வரதராஜ், நித்தியா, காங்., கவுன்சிலர் செல்வி, திருச்செல்வன் ஆகிய 9 உறுப்பினர்கள், நேற்று கலெக்டர் பிருந்தாதேவியிடம் மனு அளித்தனர்.
பின், கவுன்சிலர் திருச்செல்வன் கூறியதாவது: தம்மம்பட்டி பேரூராட்சியில், எந்தவொரு பணிக்கும் டெண்டர் வைக்க விடாமல் தலைவர் கவிதாவின் கணவர் தடுத்து வருகிறார். மேலும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் மிரட்டுகிறார். 2021ல் இருந்து டெண்டர் வைத்த திட்டப்பணிகளை, பினாமி பெயரில் டெண்டர் எடுத்து இதுவரை பணி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். டெண்டர் பணம், வாடகை பணம் என எல்லாவற்றிலும் முறைகேட்டில் ஈடுபட்டும், கடந்த நான்கு மாதங்களாக மாமன்ற கூட்டம் நடத்தாமல் உள்ளார். எந்த பணிகளும் செய்ய முடியாமல் தவித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி தலைவர், கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு பதவியை ராஜினாமா செய்வோம். இவ்வாறு கூறினார்.