/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டயாபடீஸ் அசோசியேஷன் ஆப் சேலம்' சார்பில் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கருத்தரங்கம்

ADDED : ஜூலை 24, 2025 01:47 AM
சேலம், 'டயாபடீஸ் அசோசியேஷன் ஆப் சேலம்' அமைப்பு சார்பில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு, அந்நோய் வராமல் தடுக்கும் முறை குறித்து கலந்தாய்வு மாநாடு, கருத்தரங்கம், சேலம், மாமாங்கத்தில் உள்ள ரேடிசன் ஓட்டலில் நடந்தது. அதில் கால உயிரியல் நிகழ்வுக்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து, மருத்துவர் பிரியதர்ஷிணி; அமெரிக்கா, ஐரோப்பியா டயாபடிக் அசோசியேஷன் சார்பில், 2025ல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவு குறித்து, மருத்துவர் பாலமுருகன் பேசினர்.
உடலில் ரசாயன மாற்றத்தால் ஏற்படும் கீட்டோன்கள் மற்றும் அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மருத்துவர் சத்தியன் ராகவன்; அழற்சி எதிர்ப்பு வாழ்க்கை முறையால் நீரிழிவு நோயாளிகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, மருத்துவ நிபுணர் ஆனந்த்குமார் அண்ணாமலை பேசினர்.
தொடர்ந்து சேலம் டாக்டர் ஜானகிராமன் தங்கப்பதக்க விருது, சேலம் மருத்துவர் கிருஷ்ணன்செட்டிக்கு வழங்கப்பட்டது. இறுதியில் மருத்துவர் ஹரி ஜானகிராமன், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் பாதையில் ஏற்படும் அறிகுறியற்ற பாக்டீரியா தொற்று குறித்து பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கருத்தரங்க ஏற்பாடுகளை டயாபடீஸ் அசோசியேஷன் ஆப் சேலம் தலைவர் பிரேம்குமார், துணைத்தலைவர்கள் கந்தசாமி, சதீஸ்குமார், செயலர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப்பினர் ரெங்கபாஷ்யம் உள்ளிட்ட மருத்துவர்கள் செய்திருந்தனர்.