/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடி போதையில் நோயாளிகளுக்கு மாத்திரைகளை வழங்கினாரா பணியாளர்?
/
குடி போதையில் நோயாளிகளுக்கு மாத்திரைகளை வழங்கினாரா பணியாளர்?
குடி போதையில் நோயாளிகளுக்கு மாத்திரைகளை வழங்கினாரா பணியாளர்?
குடி போதையில் நோயாளிகளுக்கு மாத்திரைகளை வழங்கினாரா பணியாளர்?
ADDED : ஏப் 29, 2025 02:04 AM
சேலம்:
சேலம், அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம் எதிரே உள்ள கட்டடத்தில், டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு நேற்று பணியாற்றிய கஞ்நசாயக்கன்பட்டியை சேர்ந்த மாதேஷ், 45, என்பவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர் நோயாளிகள் வழங்கிய சீட்டுக்கு, சரியான மாத்திரைகள் வழங்கவில்லை என கூறி, அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து நோயாளிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்தனர்.
தொடர்ந்து மாதேஷ் குடிபோதையில் இருந்தாரா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அறிக்கை வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க, மருத்துவமனை நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்படும் என போலீசார்
தெரிவித்தனர்.