/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடி மாதம் கடைசி விடுமுறை நாள் 100 கிடா, 500 நாட்டுகோழிகள் பலி
/
ஆடி மாதம் கடைசி விடுமுறை நாள் 100 கிடா, 500 நாட்டுகோழிகள் பலி
ஆடி மாதம் கடைசி விடுமுறை நாள் 100 கிடா, 500 நாட்டுகோழிகள் பலி
ஆடி மாதம் கடைசி விடுமுறை நாள் 100 கிடா, 500 நாட்டுகோழிகள் பலி
ADDED : ஆக 15, 2011 02:30 AM
மேட்டூர்: ஆடி மாதத்தின் கடைசி விடுமுறை நாளான நேற்று மேட்டூரில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நேற்று ஒரே நாளில் முனியப்பன் கோயில் மற்றும் சுற்றுப்பகுதியில் 100 கிடா, 500க்கும் மேற்பட்டகோழிகளை வெட்டி பக்தர்கள் பலி கொடுத்தனர். ஆடி மாதம் பிறந்து விட்டால் மேட்டூருக்கு பக்தர்கள் வரத்து அதிகரிக்கும். ஆடி1, ஆடி18, ஆடி28 ஆகிய நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடுவர். ஆடி மாதத்தின் முக்கிய பண்டிகைகள் அனைத்தும் வேலை நாட்களில் வந்ததால் மேட்டூருக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோர் வரவில்லை. ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டால், ஒரு மாதம் சேலம் உள்பட சுற்றுபகுதி மாவட்டங்களில் பெரும்பாலோர் அசைவம் சாப்பிடுவதில்லை. அதனால், ஆடி மாதத்தின் கடைசி விடுமுறை நாளான நேற்று அசைவ ப்ரியர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என அனைவரும் மேட்டூரை முற்றுகையிட்டனர். பக்தர்கள் அணை பூங்கா அருகாமையில் உள்ள மேட்டூர்- கொளத்தூர் மெயின்ரோட்டின் இருபுறமும் வாகனங்களை வரிசையாக நிறுத்தியால், போக்குவரத்து பாதித்தது. நேற்று ஒரேநாளில் பக்தர்கள், அசைவப்ரியர்கள் மேட்டூர் அணை முனியப்பன் கோயில், காவிரி கரையோர பகுதியில் 100 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு சமைத்து சாப்பிட்டனர்.