/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3ம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகம்
/
3ம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகம்
ADDED : டிச 23, 2025 08:11 AM

சேலம்: சேலம் மாவட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், நேற்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல், 7 ம் வகுப்பு வரை முப்ப-ருவ கல்வி முறை செயல்பாட்டில் உள்ளது. இரண்டாம் பருவத்-துக்கான வகுப்புகள், இன்றுடன் நிறைவு பெற நிலையில், ஜன., 4 வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. மீண்டும் ஜன., 5 ல், பள்ளிகள் திறக்கப்படும் போது, மூன்றாம் பருவத்துக்கான பாடப்-புத்தகம், நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சேலம் கல்வி மாவட்டத்தில் உள்ள, 799 பள்ளிகள், தாரமங்கலம் கல்வி மாவட்டத்தில், 764 பள்ளிகள் என மொத்தம், 1,563 பள்ளிகளில் படிக்கும், 1.16 லட்சம் மாணவ, மாணவியருக்கான பாடப்புத்தகங்கள் சேலம் வந்தன. இவற்றை பள்ளி வாரியாக பிரித்து, அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.

