ADDED : டிச 23, 2025 08:08 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பேளூர் சந்தையில் நேற்று ஆடு விற்பனை நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, வெள்ளிமலை, கருமந்-துறை, கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபா-ரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று அதி-காலை 5:00 மணிக்கு துவங்கிய வாரச் சந்தைக்கு, 850 ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன், 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 4,600 முதல் 6,600 வரை விலை போனது. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு, 3,500 முதல் 4,400 வரை விற்பனையானது. ஆனால் நேற்று நடந்த சந்தையில், 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு, 4,100 முதல் 5,800 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு 3,000 முதல் 4,200 ரூபாய் வரை மட்டுமே விற்பனையா-னது.
நேற்று நடந்த சந்தையில், ரூ.17 லட்சத்துக்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிகின்றனர்.

