/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., - ஊராட்சி தலைவரை வெளியேற்றி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட மக்கள்
/
தி.மு.க., - ஊராட்சி தலைவரை வெளியேற்றி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட மக்கள்
தி.மு.க., - ஊராட்சி தலைவரை வெளியேற்றி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட மக்கள்
தி.மு.க., - ஊராட்சி தலைவரை வெளியேற்றி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட மக்கள்
ADDED : ஜூலை 05, 2024 01:05 AM
ஆத்துார்: மூன்று மாதங்களாக குடிநீர் வினியோகிக்காததை கண்டித்து, தி.மு.க.,வை சேர்ந்த, நடுவலுார் ஊராட்சி தலைவரை வெளியேற்-றிவிட்டு, அலுவலகத்துக்கு மக்கள் பூட்டு போட்டனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நடுவலுார் ஊராட்சி தலைவர், தி.மு.க.,வை சேர்ந்த மூக்கன், 55.
ஊராட்சி செயலர் மலர்விழி, 30. இவர்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தில் இருந்தனர். சிறிது நேரத்தில் மலர்விழி, அருகே கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த, 7வது வார்டு, பள்ளக்காட்டை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், '3 மாதங்களாக ஆழ்துளை குழாய் கிணறு சரிசெய்யப்படவில்லை. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை' என கூறினர். தலைவர், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அடிக்கடி இதே பதிலையே தெரிவிப்பதாக கூறிய மக்கள், அலுவ-லகத்தில் இருந்த மூக்கனை வெளியே வர கோரிக்கை விடுத்தனர். அவரும் வர, 10:30 மணிக்கு, மக்கள் எடுத்து வந்த பூட்டால், ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். உடனே அங்கு வந்து கெங்கவல்லி பி.டி.ஓ., தாமரைச்செல்வி விசாரித்தார். அப்-போது மக்கள், '3 மாதங்களாக குடிநீர் பிரச்னையால் அவதிப்படு-கிறோம்' என்றனர். தாமரைச்செல்வி, 'விரைந்து குடிநீர் வழங்கப்-படும். எங்களிடம் புகார் தெரிவிக்காத நிலையில், ஊராட்சி அலு-வலகத்தை பூட்டியது தவறு' என்றார். இதனால் மதியம், 12:40 மணிக்கு பூட்டை திறந்துவிட்டனர். இருப்பினும் பூட்டு போட்ட-வர்கள், தொடர்ந்து தலைவர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்க-ளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த, கெங்கவல்லி எஸ்.எஸ்.ஐ., மணிவேல், கையெடுத்து கும்-பிட்டு, 'அனைவரும் கிளம்பி செல்லுங்கள்' என கேட்டுக்-கொண்டார். பின் அனைவரும் புறப்பட்டனர். செயலர் மலர்விழி, கெங்கவல்லி போலீசில் புகார் அளித்தார். அதில், '20க்கும் மேற்-பட்டோர், குடிநீர் பிரச்னை தொடர்பாக, தலைவரை வெளியேற்றி-விட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டனர். பேச்சுக்கு பின் பூட்டை திறந்துவிட்டனர்' என கூறியிருந்தார்.இதுகுறித்து தலைவர் மூக்கன் கூறுகையில், ''குடிநீர் குழாய் சீர-மைப்பு பணிக்கு கூலி ஆட்கள் வராததால் தாமதமாகியுள்ளது. விரைந்து பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.கலெக்டர் பிருந்தாதேவி கூறுகையில், ''ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்-னைக்கும் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.