தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தி.மு.க., மத்திய மாவட்டம் மறுசீரமைப்பு

தி.மு.க., மத்திய மாவட்டம் மறுசீரமைப்பு

தி.மு.க., மத்திய மாவட்டம் மறுசீரமைப்பு


ADDED : அக் 16, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தி.மு.க., அலுவலகத்தில், மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. எம்.பி., கிரிராஜன் தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலர் அழகிரி சதாசிவம், மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாசு முன்னிலை வகித்தனர்.

மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் பேசியதாவது:ஒன்றியம், பகுதி, 30,000 ஓட்டுகள்; மாநகராட்சியில் உள்ள வட்டம், 5,000 ஓட்டுகள் கொண்டதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்தந்த பகுதி நிர்வாகிகள், செயற்குழு கூட்டங்களை நடத்தி, வார்டுகளை பிரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு இந்த கூட்டம் ஒரு மனதாக ஒப்புதல் வழங்குகிறது. இதன்மூலம், 22 பகுதி, 132 வட்டம், 12 ஒன்றியம், 4 பேரூர், 1,972 கிளைகள் என மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாநகர செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us