தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ., இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து

சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ., இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து

சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ., இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து


ADDED : அக் 16, 2026 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: த.வெ.க.,வுக்கு ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லாத நிலையில், அ.தி.மு.க.,வில், சண்முகம் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. சிலர் பதவிகளை ராஜினாமா செய்து, த.வெ.க.,விலும் இணைந்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில், சண்முகம் ஆதரவாளரான, பண்ருட்டி தொகுதி, எம்.எல்.ஏ., மோகன், அக்கட்சியின் புது நிர்வாகிகளுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதுகுறித்து மோகன் கூறுகையில், ''எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தும், இ.பி.எஸ்., தலைமையில் என்றும் இருப்பேன். இங்கிருந்து கட்சி நிர்வாகிகள் சிலர், த.வெ.க.,வுக்கு சென்றதால், பண்ருட்டி தொகுதியில் புதிதாக இளைஞர்களுக்கு பதவி கொடுத்துள்ளனர். இதனால் புது நிர்வாகிகளுடன், இ.பி.எஸ்.,சை சந்தித்து வாழ்த்து பெற்றேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us