/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துாரில் பூ, பழக்கடைகள் அகற்றம் தி.மு.க., கவுன்சிலரின் கணவர் எதிர்ப்பு

ADDED : ஆக 09, 2024 02:17 AM
ஆத்துார்: ஆத்துார், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ் வெளியே வரும் பாதையில் பூ, பழங்கள் விற்கும், 53 கடைகள் உள்ளன. அந்த கடைகளை அகற்றிவிட்டு, ஒரு கோடி ரூபாயில், 40 கடைகள் புதிதாக கட்ட, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணி மேற்-கொள்ள, 2 மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டது.
நேற்று, பஸ் ஸ்டாண்ட் பாதையில் உள்ள கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் தலை-மையில் அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, 52 கடைகள் அகற்றப்பட்ட நிலையில், பஸ் ஸ்டாண்ட் அருகே தனியே உள்ள கடையை அகற்ற முயன்றனர். அதற்கு அந்த கடையை நடத்திய-வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, 10வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ஜீவாவின் கணவர் ஸ்டாலின், நகராட்சி அலுவலர்களிடம் தகராறு செய்தார். உடனே ஆத்துார் டவுன் போலீசார் வந்து, தகராறு செய்தவர்களை வெளி-யேற்றிவிட்டு, 'பொக்லைன்' மூலம் கடையை இடித்து அப்புறப்-படுத்தினர்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஸ்டாலின் கூறுகையில், ''சாலை-யோரம் கடை வைத்து பிழைத்து நடத்துவோருக்கு அவகாசம் கொடுக்காமல் அப்புறப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்-பினேன்,'' என்றார்.