ADDED : ஏப் 26, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார், கடைவீதியை சேர்ந்தவர் தணிகேசன், 43. தி.மு.க., மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கு, ஆத்துார், ராணிப்பேட்டை தனியார் வணிக வளாகத்தில், அலுவலகம் உள்ளது.
நேற்று முன்தினம் அலுவலகத்தை பூட்டிச்சென்ற நிலையில் நேற்று காலை வந்தபோது, வெளிப்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, டிராவில் இருந்த ஆவணங்கள் சிதறி கிடந்தன. 20,000 ரூபாய் மதிப்பில், மொபைல் போனை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

