/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி தி.மு.க.,'
/
'பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி தி.மு.க.,'
ADDED : செப் 25, 2024 01:39 AM
'பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி தி.மு.க.,'
ஆத்துார், செப். 25-
ஆத்துாரில், நரசிங்கபுரம் அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் நேற்று நடந்தது. அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசுகையில், ''ஓமலுார், கொளத்துார், கருமந்துறை பகுதிகளில், கடந்த, 3 நாளாக கொடூர கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. 2026ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வர கட்சியினர் அயராது உழைக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிவபதி பேசுகையில், ''தி.மு.க., 525 பொய் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்துள்ளது. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி தி.மு.க., கரும்பு, நெல் கொள்முதல் விலை தருவதாக விவசாயிகளையும், நீட் தேர்வு ரத்து செய்வதாக மாணவர்களையும், பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பதாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களையும் ஏமாற்றியுள்ளனர். அதனால் யாரோ வேட்பாளர் என நினைக்காமல், இ.பி.எஸ்., வேட்பாளர் என கருதி, தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
இதில், எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி, நகர செயலர் மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.