/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
27ல் தி.மு.க., கூட்டம்: கட்சியினருக்கு அழைப்பு
/
27ல் தி.மு.க., கூட்டம்: கட்சியினருக்கு அழைப்பு
ADDED : மே 23, 2024 07:23 AM
சேலம் : தி.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி அறிக்கை:தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், வரும், 27 மதியம், 3:00 மணிக்கு, மாவட்ட கட்சி அலுவலகமான, வீரபாண்டியார் அரங்கில் நடக்க உள்ளது.
மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகிப்பார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழா, கட்சி பணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள், ஒன்றிய, நகர பேரூர் செயலர்கள், கட்சியின் துணை அமைப்பினர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மீனவர், சிறுபான்மை நலக்குழு உரிமை பிரிவு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அணி, தொழிலாளர், விளையாட்டு மேம்பாட்டு, அமைப்புசாரா ஓட்டுனர், அயலகம், ஆதிதிராவிடர் நலக்குழு உள்ளிட்டவற்றின் மாவட்ட அமைப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

