/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணை முதல்வர் பிறந்தநாள் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
/
துணை முதல்வர் பிறந்தநாள் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
துணை முதல்வர் பிறந்தநாள் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
துணை முதல்வர் பிறந்தநாள் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ADDED : நவ 28, 2025 01:00 AM
ஓமலுார், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை ஒட்டி, ஓமலுாரில், தி.மு.க., ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமையில் கட்சியினர், கேக் வெட்டி கொண்டாடினர். ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, பயணியர், சாலையோர வியாபாரிகள், மக்களுக்கு இனிப்பு வழங்கினார். சுற்றுச்சூழல் மத்திய மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அதேபோல் காடையாம்பட்டியில் ஒன்றிய செயலர் அறிவழகன் தலைமையில் கட்சியினர், மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பனமரத்துப்பட்டியில், நகர தி.மு.க., செயலர் ரவிக்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலர் உமாசங்கர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மல்லுாரில், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் தலைமையில், துாய்மை பணியாளர்களுக்கு இனிப்பு, உணவு வழங்கினர்.
தாரமங்கலம் மேற்கு ஒன்றியம் சார்பில், பாப்பம்பாடி சந்தைப்பேட்டை அருகே, ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர், பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இடைப்பாடியில், நகராட்சி தலைவர் பாஷா, மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர அவைத்தலைவர் மாதையன், துணை செயலர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

