/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க.,வில் சேலம் மேற்கு மாவட்ட மாணவரணி நகர, ஒன்றிய அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்

ADDED : அக் 26, 2025 01:15 AM
இடைப்பாடி, தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட மாணவரணியில் உள்ள, நகர, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், இடைப்பாடியில் நேற்று நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன்
வரவேற்றார்.அதில் மாநில மாணவர் அணி செயலர் ராஜீவ்காந்தி பேசியதாவது: கட்சியில் உழைத்தால் படிப்படியாக முன்னேறலாம். திராவிடத்தால் மட்டுமே தமிழ் மொழி, தமிழகம் வளர்ந்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழிகள் காணாமல் போயுள்ளன. தி.மு.க., இருப்பதால் தான் தமிழ் மொழி காப்பற்றப்பட்டு வருகிறது. மாணவர் அணி என்பது கட்சியின் சார்பு அணி. நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், எவ்வாறு செயல்பட சொல்கி
றார்களோ அவ்வாறு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாணவரணி மண்டல செயலர் தமிழரசன், மாநில துணை செயலர் வீரமணி, மாவட்ட துணை செயலர்கள் சம்பத்குமார், சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவாகவுண்டர், இடங்கணசாலை நகர செயலர் செல்வம், கொங்கணாபுரம் தெற்கு ஒன்றிய செயலர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலர் டாடா, சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலர் சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.