/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரை தேடி வந்த மானை கடித்து குதறிய நாய்கள்
/
இரை தேடி வந்த மானை கடித்து குதறிய நாய்கள்
ADDED : நவ 25, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம், மாரியம்மன் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 45. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில், 2 வயதுள்ள ஆண் புள்ளிமான் நேற்று காலை, 8:00 மணிக்கு உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது.
இதையடுத்து, வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு, கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்து உடற்கூறாய்வு மேற்கொண்டனர். வனப்பகுதியில் இருந்து தனியாக தோட்டத்திற்கு இரை தேடி வந்த புள்ளிமானை, ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறி கொன்றுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

