/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பயணியரிடம் இழிவாக பேசினால் டிரைவர், கண்டக்டர் உரிமம் ரத்து'
/
'பயணியரிடம் இழிவாக பேசினால் டிரைவர், கண்டக்டர் உரிமம் ரத்து'
'பயணியரிடம் இழிவாக பேசினால் டிரைவர், கண்டக்டர் உரிமம் ரத்து'
'பயணியரிடம் இழிவாக பேசினால் டிரைவர், கண்டக்டர் உரிமம் ரத்து'
ADDED : மே 02, 2025 02:20 AM
ஆத்துார்:
சேலத்தில் இருந்து ஆத்துார் வழியே கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், சென்னை, திருச்சி, பெரம்பலுார், தம்மம்பட்டி போன்ற பகுதிகளுக்கு, அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் தனியார் பஸ்கள், சென்னை செல்லும் அரசு பஸ்களில், ஆத்துார், வாழப்பாடி பயணியரை, பஸ் புறப்படும்போது ஏற வேண்டும் என, டிரைவர், கண்டக்டர்கள் கூறுகின்றனர்.
இதில், 2024, அக்., 25, 2025 மார்ச், 3ல் சேலத்தில் இருந்து, ஆத்துார், வாழப்பாடிக்கு செல்ல, தனியார் பஸ்சில் ஏற முயன்ற பயணியரை, டிரைவர், கண்டக்டர் இழிவாக பேசியதாக, தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. இதுகுறித்து ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் அலுவலர்கள் விசாரித்து, சம்பந்தப்பட்ட தனியார் பஸ் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். பின் மோட்டார் வாகன ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து தாமோதரன் கூறுகையில், ''தனியார் பஸ் கண்டக்டரிடம் விசாரித்து, மன்னிப்பு கடிதம் பெறப்பட்டது. பயணியரிடம், கண்டக்டர், டிரைவர்கள் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற புகார் தொடர்ந்து வந்தால், சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

