/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தை பலியான விவகாரம் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
/
குழந்தை பலியான விவகாரம் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
குழந்தை பலியான விவகாரம் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
குழந்தை பலியான விவகாரம் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 15, 2025 01:24 AM
சங்ககிரி, தர்மபுரி மாவட்டம் கருங்கல்லுாரை சேர்ந்தவர் ராஜதுரை, 31. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகள் ஸ்ரீரேணுகா, 7, மற்றும், 9 மாத ஆண் குழந்தை நவனீஷ். இவர்கள், கடந்த, 12 இரவு சேலத்தில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் சென்றனர்.
பஸ் முன்புற படிக்கட்டு எதிரே உள்ள சீட்டில் ராஜதுரை, ஆண் குழந்தையை தோளில் போட்டு துாங்கிக்கொண்டிருந்தார். இரவு, 10:15 மணிக்கு, சங்ககிரி, வளையக்காரனுார் மேம்பாலத்தில் சென்றபோது, டிரைவர், 'பிரேக்' போட்டுள்ளார். அப்போது குழந்தை நழுவி, படிக்கட்டு கதவு சாத்தப்படாத நிலையில், வெளியே விழுந்து பலியானது.
இதுகுறித்து ராஜதுரை புகார்படி, தேவூர் போலீசார் விசாரித்து, கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த, பஸ் டிரைவர் சிவன்மணி, 48, கோவை, சோமயம்பாளையத்தை சேர்ந்த, கண்டக்டர் பழனிசாமி, 50, மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின், ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.
இந்நிலையில் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாக கூறி, சிவன்மணி, பழனிசாமியை, 'சஸ்பெண்ட்' செய்து, கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் துரைசாமி நேற்று உத்தரவிட்டார்.