ADDED : ஜூலை 13, 2026 01:14 AM
அ நிறம் | அளவு
சேலம்: ஆந்திராவில் இருந்து பட்டிமாவு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, நேற்று, சேலத்துக்கு வந்துகொண்டிருந்தது.
வீராணம் அடுத்த அரமனுார், செட்டியார்காடு பஸ் ஸ்டாப் அருகே வந்த-போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருக்கும் நிழற்-கூடத்தின் மீது மோதியது. இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. டிரைவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சாலையோரம் நிறுத்தியி-ருந்த ஸ்பிளண்டர் பைக், தண்ணீர் டேங்க், மாட்டு கொட்டகை ஆகியவை, லாரி மோதி பலத்த சேதமடைந்தன. வீராணம் போலீசார், டிரைவர் உடலை கைப்பற்றி விசாரித்ததில், அவர், வேலுார் டவுன், சலவன்பேட்டை, சதுக்கரா மடத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என தெரிந்தது.
