/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரக்கு வேன்கள் மோதி டிரைவர் பலி; 6 பேர் 'சீரியஸ்'
/
சரக்கு வேன்கள் மோதி டிரைவர் பலி; 6 பேர் 'சீரியஸ்'
ADDED : செப் 29, 2024 01:37 AM
சரக்கு வேன்கள் மோதி டிரைவர் பலி; 6 பேர் 'சீரியஸ்'
ராசிபுரம், செப். 29-
ராசிபுரம் அருகே, இருசரக்கு வேன்கள் மோதியதில் டிரைவர் உயிரிழந்தார். 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியை சேர்ந்த காய்கறி வியாபாரிகள், நேற்று பேளுக்குறிச்சி சந்தைக்கு சென்றனர். சந்தை முடிந்து, காய்கறியை, 'மகேந்திரா' சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு, இரவு, 10:00 மணிக்கு பேளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சேசன்சாவடியை சேர்ந்த டிரைவர் தங்கம், 30, ஓட்டினார். அப்போது எதிரே, நெடுஞ்சாலை சிக்னல் விளக்குகளை பராமரிப்பவர்கள் சிலர், மற்றொரு சரக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். போடிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, இரு வேன்களும் நேருக்கு நேர் மோதியது. இரு வேன்களும் நொறுங்கின. டிரைவர் தங்கம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதில் சிங்களாந்தபுரத்தை சேர்ந்த ரமேஷ், கண்ணன், 25, சதீஷ்குமார், 35, கிருஷ்ணமூர்த்தி, 33, மோளப்பாளையம் முருகன், 45, பெரியசாமி, 40, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஒருவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேளுக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.