நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,சேலம், கருப்பூர் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 45. டிரைவராக பணியாற்றினார்.கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்ற நிலையில் தனியே வசித்தார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து பார்த்தபோது ராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
மக்கள் தகவல்படி, கருப்பூர் போலீசார் வந்து விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'ராமகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா, வேறு ஏதும் மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடக்கிறது' என்றனர்.