/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழக - கர்நாடகா எல்லையில் வறட்சி கருகி வீணான கருவேலமரங்கள்
/
தமிழக - கர்நாடகா எல்லையில் வறட்சி கருகி வீணான கருவேலமரங்கள்
தமிழக - கர்நாடகா எல்லையில் வறட்சி கருகி வீணான கருவேலமரங்கள்
தமிழக - கர்நாடகா எல்லையில் வறட்சி கருகி வீணான கருவேலமரங்கள்
ADDED : மார் 20, 2024 02:19 AM
மேட்டூர்:நடப்பாண்டு
கோடைவெயில் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, கடந்த மாதம் முதல்
வாரத்தில் இருந்தே வெயில் கடுமையாக இருப்பதால் மேட்டூர் அடுத்த தமிழக -
கர்நாடகா எல்லையிலுள்ள பாலாறு தண்ணீர் இன்றி வறண்டு விட்டது
மேலும்
பாலாற்றின் கரையோரம் வனப்பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள்
வளர்ந்து அடர்த்தியாக காணப்பட்டன. அப்பகுதியில் கால்நடைகள்
மேய்ந்து பசியை போக்கும்.
தற்போது கோடைவெயில் தாக்கம் காரணமாக,
ஏராளமான கருவேலமரங்களின் கிளைகள் உதிர்ந்து, மரங்களும் அடிப்பகுதி
கருகி மொட்டையாக காட்சியளிப்பதால், அப்பகுதியில் மேயும்
கால்நடைகள் தீவனமின்றி தவிக்கும் அவலம் நீடிக்கிறது.