/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலையில் போதைப்பொருள் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : ஆக 09, 2025 01:16 AM
சேலம், போலீஸ் துறை, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை இணைந்து நடத்திய, போதைப்பொருள் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்ச்சி, விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல்
கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது.
பல்கலை துணைவேந்தர் சுதிர், இணை துணைவேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன் முன்னிலை வகித்தனர்.
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகையில், ''போதை பொருட்கள் போன்ற தவறான செயல்பாடுகளுக்கு ஒருபோதும் அடிமையாகாமல் தற்காத்து கொண்டு, நம் குடும்பம், மாநிலம், நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என்றார்.
துணைவேந்தர் சுதிர்
பேசுகையில், ''போதை இல்லா பல்கலை எனும் நிலையை உருவாக்க, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
இணை துணைவேந்தர் சபரிநாதன், ''தனி மனித சுய ஒழுக்கம், நம்மால் பிறருக்கு தீங்கு ஏற்படாமல் செயல்படுவது, நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் சட்ட திட்ட வரைவுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்,'' என்றார்.
இதில் மாவட்டத்தில் உள்ள விநாயகா மிஷன்ஸ் கல்லுாரிகளில் இருந்து, 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.