/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை மாத்திரை விற்ற கும்பல் கைது 7,900 மாத்திரைகள் பறிமுதல்
/
போதை மாத்திரை விற்ற கும்பல் கைது 7,900 மாத்திரைகள் பறிமுதல்
போதை மாத்திரை விற்ற கும்பல் கைது 7,900 மாத்திரைகள் பறிமுதல்
போதை மாத்திரை விற்ற கும்பல் கைது 7,900 மாத்திரைகள் பறிமுதல்
ADDED : ஜன 25, 2025 02:00 AM
சேலம்:சேலத்தில், கல்லுாரி மாணவர்கள் பலருக்கு போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்தவர்களை கைது செய்த போலீசார், 7,900 மாத்திரைகள், 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் டவுன், ஆற்றோர காய்கறி மார்க்கெட் பகுதியில் கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பதாக வந்த தகவல் அடிப்படையில், போலீசார் அவர்களை பிடித்தனர். விசாரணையில், அவர்கள், சேலம், திருவாக்கவுண்டனுாரைச் சேர்ந்த வெங்கடேசன், 31, ராம்குமார், 34, உட்பட ஒன்பது பேர் என்பது தெரிந்தது.
இவர்கள் ஆன்லைனில் போலியான மருந்து கடை பெயரை பதிவிட்டு, வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியுள்ளனர். அந்த மாத்திரைகளை, 3,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததும், சேலத்தில் கல்லுாரி மாணவர்கள் பலருக்கு அதிகளவில் விற்பனை செய்ததும் தெரிந்தது. இவர்களிடம், 7,900 போதை மாத்திரைகள், 40 கிலோ புகையிலை பொருட்கள், இரண்டு கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.