/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏ.டி.எம்., உடைப்பு 'போதை' ஊழியர் கைது
/
ஏ.டி.எம்., உடைப்பு 'போதை' ஊழியர் கைது
ADDED : ஜூலை 03, 2025 01:31 AM
சேலம், சேலம், 4 ரோட்டில் உள்ள, ஒரு ஏ.டி.எம்., மையத்தில், நேற்று முன்தினம் இரவு ஒருவர் பணம் எடுக்க முயன்றார். பணம் வராததால், இயத்திரத்தை அடித்து சேதப்படுத்தினார். 'டிஸ்பிளே' உடைந்து, 'அலாரம்' ஒலித்ததால், அந்த வாலிபர் ஓடிவிட்டார். தொடர்ந்து வங்கி அதிகாரிகள் தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, அதே பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், 32, என்பதும், சேலம், 4 ரோட்டில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்ததும், சில நாட்களுக்கு முன் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரிந்தது. மேலும் துணிக்கடையில் சென்று நிலுவை சம்பளம் கேட்டபோது, வங்கியில் செலுத்தப்பட்டதாக தெரிவிக்க, 'போதை'யில் ஏ.டி.எம்., மையத்துக்கு சென்ற சதீஷ்குமார், இயந்திரத்தை சேதப்படுத்தியதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.