ADDED : ஜூலை 08, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்,பள்ளி மாணவி மாயமானது தொடர்பாக, தாரமங்கலத்தை சேர்ந்த வாலிபர் மீது, பெற்றோர் கொடுத்த புகார்படி போலீசார் தேடி வருகின்றனர்.
மேட்டூர்,  கே.பி.என். நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின், 16 வயது மகள் எஸ்.எஸ்.எல்.சி., படித்து விட்டு, ஒரு பாடத்தில் பெயில் ஆனதால் வீட்டில் இருந்து படித்தார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு தண்ணீர் பிடிப்பதற்காக அவரது தாய் வெளியே வந்தபோது மாணவியை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மாணவிக்கு தாரமங்கலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் அடிக்கடி மொபைலில் பேசியதாக தெரிகிறது. மாணவியை அந்த வாலிபர் கடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில், அவரது தாய் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

